மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: “மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை.
ஆனால் நாம் பேச வேண்டியது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துதான். அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதைவிடுத்து யாரேனும் மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், அதையெல்லாம் நீங்கள் ஊடகங்களில் காட்டாதீர்கள்.” என்று கூறினார்.
முன்னதாக, அக்கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா கடவுள் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார். உலகில் உள்ள எல்லோரும் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் என்று இருக்கும்போது சில கடவுள்களுக்கு மட்டும் எப்படி நான்கு கைகள் இருக்கும் என்று பேசினார்.
மேலும், அறிவியல் நடைமுறைக்கேற்ப தான் அவ்வாறு பேசியதாகவும், கற்பனையில் மட்டுமே நான்கு கைகளுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
அவரின் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மதம் தொடர்பான பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! நிதின் நவீன் தொகுதியைக் கைப்பற்றினார்!

வைகையை மாசுபடுத்தாமல் காப்போம்: மதுரை மக்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

நான் சிம்புவின் அம்மாவா? வதந்திகளுக்கு பதில் கொடுத்த ஆண்ட்ரியா!

சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



