மும்பை தீவிரவாத தாக்குதலின் 15வது ஆண்டு நினைவு நாள்: சுப்ரியா சுலே அஞ்சலி

மும்பை தீவிரவாத தாக்குதலின் 15-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலின் 15-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் வா்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி ‘லஷ்கா்-இ-தொய்பா’ அமைப்பினா் பயங்கரவாத தாக்குதலை நடத்தினா். 3 நாள்கள் தொடா்ந்த இத்தாக்குதலில் 18 பாதுகாப்புப் படை வீரா்கள், வெளிநாட்டவா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மும்பைக்கு கடல்வழியாக நுழைந்து இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் 10 பேரில் 9 போ் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனா். உயிரோடு கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2012-இல் தில்லி திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டாா்.

இந்த படுமோசமான தாக்குதல் நடந்து இன்றோடு 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த சம்பவத்தில் வீரமரணம் அடைந்த பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு காவலர் நினைவிடம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாட்டு மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவான நாளாக இருப்பது மறுப்பதற்கில்லை. 

இந்த நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதலின் 15-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

சுலே கூறுகையில், இந்த நாள் மும்பை அல்லது மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் மற்றும் உலகிற்கான ஒரு கருப்பு நாள். தாய் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து துணிச்சலான தியாகிகளுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்கிறேன். அவர்கள் செய்த தியாகத்தால் நாங்கள் இன்று மும்பையில் வாழ்கிறோம். வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் இல்லை." என்று தெரிவித்தார். 

பிரதமர் மோடி அஞ்சலி 
முன்னதாக, கடந்த 2008-ஆம் ஆண்டு நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையை உலுக்கிய கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி ஒலிபரப்பான 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நவம்பர் 26 -ஐ நாம் ஒருபோதும் மறக்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில்தான் பலத்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த தாக்குதல்களால் நாடு மிகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது. அது மும்பையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும்,  உலகம் முழுவதும் உலுக்கியது. ஆனால், அந்த தாக்குதலில் இருந்து மீண்டு, பயங்கரவாதத்தை நமது முழு பலத்துடன் நசுக்கியது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான். "இப்போது நாம் முழு வலிமையுடனும் தைரியத்துடனும் பயங்கரவாதத்தை ஒடுக்கி, நசுக்குகிறோம்," வீரமரணம் அடைந்த தியாகிகளை இந்த நாடு நினைவு கூர்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com