அசாம்: பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு

அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. நேற்றிரவு பெஹாலிக்கு அருகே புரோய்காட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை காட்டு யானைக் கூட்டம் ஒன்று கடக்க முயன்றுள்ளது.

அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென யானை ஒன்றின் மீது மோதியது. இதில் யானை ஒன்று நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

உயிரிழந்த யானைக்கு இன்று உடற்கூராய்வு நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மேற்கு வங்கத்தில் நேற்று சரக்கு ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com