மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்வு!

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்வு!

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 
Published on

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக எம்எல்ஏக்களின் ஊதியம் ரூ.10 ஆயிரமும், மாநில அமைச்சர்களின் சம்பளம் ரூ.10,900 ஆகவும், பொறுப்பு அமைச்சர்களுக்கு ரூ.11 ஆயிரமும் இருந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை அமைச்சர்களின் சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் மாதத்திற்கு ரூ.50,000, ரூ.50,900 மற்றும் ரூ.51,000 பெற உள்ளனர். 

உறுப்பினர் ஊதியங்கள்(திருத்தம்) மசோதா 2023-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் அவையில் இல்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பள உயர்வு முடிவை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. 

நிறையப் பணம் வைத்திருப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள், குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். பல கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட பல எம்எல்ஏக்களும் உள்ளனர். தேவையில்லாதவர்களும் உள்ளனர். 

வாழ்வாதாரத்துக்காக சம்பாதிப்பவர்களும், 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களும் எங்களிடம் உள்ளனர். ஆனால், அவர்கள் எந்த பிரச்னையையும் செய்யவில்லை என்றார். 

மேற்கு வங்க சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என செப்டம்பர் 7 தேதியன்று பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com