விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தன்பாத்: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூடு

தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

News image

கோப்புப் படம்.

Updated On :13 அக்டோபர் 2023, 2:53 pm

DIN

தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தன்பாத்தில் சீல்டா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பி-8 பெட்டியில் ஏறிய ஹர்விந்தர் சிங்(41) டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் துப்பாக்கியால் சுட்டார். ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக அந்த நபரைக் கைது செய்தது. 
தொடர்ந்து, கோடெர்மா நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கி மாநில காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். எனவே, அனைத்து பயணிகளும் சரியான டிக்கெட்டுடன் மட்டுமே எந்த ரயிலிலும் ஏற வேண்டும். இருப்பினும், இந்த சம்பவத்தில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹவுரா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்கு டிக்கெட் எடுத்த ஹர்விந்தர் சிங், தன்பாத்தில் சீல்டா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸில் ஏறினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கைதான ஹர்விந்தர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.