அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் 4-வது விமானம் தில்லி வந்தது!
முதல்வர் பூபேஷ் பாகேல் படானிலும், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அம்பிகாபூரிலும் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



