கொள்ளையடிப்பதற்கு மட்டுமே காங்கிரஸால் உத்தரவாதம் அளிக்க முடியும்: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

கொள்ளையடிப்பதற்கு மட்டுமே காங்கிரஸால் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா


புது தில்லி: காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் பிரசாரத்திற்கு நிதியளிப்பதற்காக ஊழல் மூலம் பணம் சேகரிக்கும் ஏடிஎம் மையமாக கர்நாடகாவை மாற்றிவிட்டதாக திங்கள்கிழமை குற்றம் சாட்டிய பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, "கொள்ளையடிப்பதற்கு மட்டுமே காங்கிரஸால் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கூறினார்.

கடந்த வாரம் பெங்களூரில் உள்ள ஒப்பந்ததாரா், அவரது மகன், உடற்பயிற்சி பயிற்சியாளர் உள்ளிட்ட பலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 42 கோடி பணத்தையும் பறிமுதல் செய்தனா். 

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் பிரசாரத்திற்கு நிதியளிப்பதற்காக ஊழல் மூலம் பணம் சேகரிக்கும் ஏடிஎம் மையமாக கர்நாடகாவை மாற்றிவிட்டதாக பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா திங்கள்கிழமை குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மையமாக கா்நாடகம் மாற்றப்படும் என்று சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக குற்றம்சாட்டியது உண்மையாகியுள்ளது. 

கர்நாடகாவில் விசாரணை அமைப்புகளால் நடத்தப்பட்ட சோதனைகளில் சில ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ. 100 கோடிக்கு மேல் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டதை மேற்கோள் காட்டிய நட்டா, இது வெட்கக்கேடானது என்றும், இது காங்கிரஸின் ஊழல் டிஎன்ஏவின் ஒரு மாதிரி மட்டுமே என்று அவர்  கூறினார்.

மேலும், காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஒப்பந்ததாரா் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 23 பெட்டிகளில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக இருந்த ரூ. 42 கோடி.

காங்கிரஸ் அரசுகள் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை ஊழல் நிறைந்த ஏடிஎம்களாக மாற்றியுள்ளன.

மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரே மாதிரியான ஏடிஎம்களை உருவாக்க விரும்புகிறது.

மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கனவு காண்கிறது, இதனால் ஏழைகளின் நலன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடிக்க முடியும் என்று நட்டா மேலும் குற்றம் சாட்டினார்.

"காங்கிரஸால் கொள்ளையடிப்பதற்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்" என்று கூறியுள்ள நட்டா, கர்நாடகாவில் அது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வாக்குறுதிகளை அளிப்பதில் மட்டுமே காங்கிரஸ் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், வாக்குறுதிகளுக்குப் பதிலாக உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் ஒரு படி மேலே சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு கர்நாடகாவில் ஊழல் அபரிமிதமாக வளர்ந்துள்ளது, காங்கிரஸின் உத்தரவாதம் எப்போதும் ஊழலுக்குத்தான் என்பது தெளிவாகிறது என்று நட்டா தெரிவித்தார்.

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தல் செலவுக்கு அனுப்பிவைக்க சோ்த்து வைத்த பணத்தைத்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா். கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மையமாக கா்நாடகம் மாற்றப்படும் என்று சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக குற்றம்சாட்டியது உண்மையாகியுள்ளது. ஏடிஎம் அரசின் சிறு பணம்தான் சிக்கியுள்ளது. இதுபோல மேலும் பல பெட்டிகள் உள்ளன. இது சேகரிக்கப்பட்ட பணம். இது வெறும் மாதிரிதான். கமிஷன் பணம் குறித்து ஒப்பந்ததாரா் சங்கம் பேச வேண்டும் என்று பாஜக முன்னாள் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ள இரு கட்சிகளும் தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com