விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மும்பையில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் ரயில் நிலையத்துக்கு அருகே பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகளில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image

கோப்பிலிருந்து..

Updated On :16 அக்டோபர் 2023, 12:36 pm

PTI


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் ரயில் நிலையத்துக்கு அருகே பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகளில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அஷ்தி ரயில் நிலையத்திலிருந்து அகமதுநகர் ரயில்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில், திடீரென தீப்பற்றியது.

ரயில் பெட்டிகள் முழுவதும் தீ பரவுவதற்குள், நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.