அந்தமான் நிகோபாா் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
அந்தமான் நிகோபாா் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டா் அளவு கோலில் 4.2-ஆக இது பதிவானது. 

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில்,  ‘அந்தமானில் அதிகாலை 5.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.23-ஆக பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

முன்னதாக திங்கள்கிழமை, மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com