கோப்புப்படம்
கோப்புப்படம்

ம.பி.: பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏக்லவ்யா பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
Published on

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏக்லவ்யா பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை சாப்பிட்ட பிறகு, விடுதியில் உள்ள மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சிலர் விக்டோரியா மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 

மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு விஷமானதாக கூறியுள்ளார். 

ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம், மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் குழு விடுதிக்கு விரைந்தனர். விடுதியை ஆய்வு செய்த எஸ்டிஎம் பங்கஜ் மிஸ்ரா, மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்து வருகின்றனர். 

விடுதியில் ஆய்வு செய்து மாணவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com