மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?

நாட்டிலேயே மதுபானங்கள் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவது கோவாவில்தான். அதேநேரத்தில் அதிக விலைக்கு விற்பதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 
மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?

நாட்டிலேயே மதுபானங்கள் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவது கோவாவில்தான். அதேநேரத்தில் அதிக விலைக்கு விற்பதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 

நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா இடமான கோவா, கடற்கரைகளுக்கு மட்டுமல்ல, மதுபானத்திற்கும் பிரபலம்தான். இங்கு மதுபான விலை குறைவாக இருக்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால், மற்ற அனைத்து மாநிலங்களையும்விட நாட்டிலேயே கோவாவில்தான் குறைவு என்பது அதிகாரப்பூர்வ தகவல். ஏனெனில் மதுபானங்களுக்கு இங்கு மிகவும் குறைவான வரிதான் விதிக்கப்படுகிறது. 

அந்தவகையில் மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் நாட்டில் அதிக விலைக்கு மது விற்கப்படுவது கர்நாடகத்தில்தான். 

இந்தியாவின் சர்வதேச மதுபானம் மற்றும் ஒயின்கள் சங்கம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. 

கோவாவில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் விஸ்கி, ரம், வோட்கா, ஜின் போன்ற ஒரு மதுபான(ஸ்பிரிட்) பாட்டில் தில்லியில் ரூ. 134-க்கு விற்கப்படுகிறது. இதுவே கர்நாடகத்தில் ரூ. 513.

கோவாவில் மதுபானங்களுக்கு 49% வரி விதிக்கப்படும் நிலையில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 83% ஆகவும், அதையடுத்து மகாராஷ்டிரத்தில் 71% ஆகவும் உள்ளது. 

தில்லி, மும்பையில் பிரபல ஸ்காட்ச் பிராண்டு பாட்டில்களின் விலையில் 20% வித்தியாசம் இருக்கலாம். உதாரணமாக, தில்லியில் சுமார் ரூ.3,100 விலையுள்ள ஒரு பிளாக் லேபிள் பாட்டில், மும்பையில் சுமார் ரூ.4,000-க்கு விற்கப்படுகிறது. மாநில எல்லைகளில் மதுபானங்கள் கடத்தப்படுவதும் இந்த விலை வித்தியாசத்திற்குக் காரணம். 

வெளிநாடுகளில் இருந்து மதுபானங்களுக்கான இறக்குமதி வரி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதுதான். 

மது, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் வராததால் இதற்கு நாடு முழுவதும் வெவ்வேறு வரி விகிதங்கள் உள்ளன. இதனால் மாநிலங்களில் மதுபான விலை வேறுபடுகிறது. 

வரி வருவாய் குறையும்போது மாநிலங்கள் பெரும்பாலாக பெட்ரோல், டீசல், ஆல்கஹால், சொத்து மீதான வரியை உயர்த்துகின்றன. 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், மதுபானங்களை அதில் சேர்ப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. 

இதையும் படிக்க |  ஷவர்மாவில் என்ன ஆபத்து?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com