பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பணிகள் தீவிரம்!

திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:01 pm IST

திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா பேரவைத் தோ்தலில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை, 28.13 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா்.

Story image

மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதில், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கதேசத்துடனான எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Story image

இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு தயாராக வைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தலுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.