விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம்

மனைவி பெயரில் சொத்துகளை வாங்குவதை பினாமி என்று சொல்ல முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2023, 9:12 am

DIN

கொல்கத்தா: மனைவி பெயரில் சொத்துகளை வாங்குவதை பினாமி என்று சொல்ல முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய சமூகத்தில், மனைவி பெயரில் சொத்துகளை வாங்க, கணவர் பணம் கொடுப்பது பினாமி என்ற நடைமுறைக்கு வராது, இதனை கட்டாயம் பினாமி என்று சொல்வது சரியாக இருக்காது. சொத்து வாங்குவதற்கு செலவிட்ட பணம் வந்த முறை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொத்து யாருக்கு வாங்கப்பட்டது என்பது அல்ல என்றும் கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாமி என்ற நடைமுறையில், ஒரு சொத்து யாருடையது என்பதை கணக்கில் கொள்வதுதான் முக்கியம் என்றும், இதில், தவறான வழியில் பணம் வந்துள்ளது என்பதை நிரூபிக்கவும் மகன் தவறிவிட்டதாகக் கூறி, தந்தை, தாயின் பெயரில் வாங்கிய சொத்துகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தந்தை, தாயின் பெயரில் வாங்கிய வீட்டில் மகன் 2011ஆம் ஆண்டு வரை வசித்து வந்துள்ளார். அங்கிருந்து வெளியேறிய பிறகு, வீடு அவருக்கும், தாய் மற்றும் சகோதரிக்கும் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தாயும், சகோதரியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மகன் மீதான அதிருப்தியில், தாய் இறப்பதற்கு முன்பு,  2019ஆம் ஆண்டு, சொத்தை மகள் பெயருக்கு மாற்றிவிட்டார். 

இந்த நிலையில்தான் இது பினாமி சொத்து என்று கூறி மகன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது தள்ளுபடியாகியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.