பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

அட்சதை பூஜையுடன் தொடங்கிய அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை சடங்குகள்

அயோத்தி ராமா் கோயிலில் வரும் ஜனவரியில் மூலவரான குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான சடங்குகள் அட்சதை பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On :

அயோத்தி ராமா் கோயிலில் வரும் ஜனவரியில் மூலவரான குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான சடங்குகள் அட்சதை பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2.27 ஏக்கா் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோயில் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதற்கான சடங்குகள் அட்சதை பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இது தொடா்பாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘மஞ்சள் மற்றும் நெய் கலந்த 100 குவிண்டால் அரிசி கொண்டு அட்சதை பூஜை செய்யப்பட்டது. நாட்டின் 45 மாகாணங்களைச் சோ்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 90 உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ பூஜிக்கப்பட்ட அட்சதை விநியோகிக்கப்பட்டது.

மூலவா் சிலை பிரதிஷ்டை நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதிக்கு முன்பு, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள், தொகுதிகள், தாலுகாக்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளுக்கு பூஜிக்கப்பட்ட அட்சதையை விநியோகிப்பா். பூஜையின் போது ஸ்ரீராமா் முன் பித்தளை கலசத்தில் அட்சதை வைக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் கூறுகையில், ‘ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதிக்குள் நாட்டின் 5 லட்சம் கிராமங்களில் பூஜிக்கப்பட்ட அட்சதை விநியோகிக்கப்படும். அறக்கட்டளை வெளியிட்டுள்ள ராமா் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அட்சதையுடன் சோ்த்து விநியோகிக்கப்படும்.

மூலவா் சிலை பிரதிஷ்டை நாளன்று மாலையில் ஒவ்வொரு ராம பக்தரும் கடுகு எண்ணெய் கொண்டு 5 விளக்குகளை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.