பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

விழுப்புரம் நூலகங்களிலிருந்து 1,797 சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்!

நூலகங்களிலிருந்து நீக்கப்பட்ட 1,797 சர்ச்சை நூல்கள் பற்றி..

Library

நூலகம் - பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தின் 2 சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,797 போலி நூல்கள் விழுப்புரம் மாவட்ட நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார். அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களிலிருந்து அடையாளம் தெரியாத எழுத்தாளர்களின் பெயர்களில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த இரு பதிப்பகங்கள் மூலமாக மாவட்ட நூலகத்துக்கும், கிளை நூலகங்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி 2025-26 ஆம் நிதியாண்டில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் (ஒருங்கிணைந்தது) பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 81 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 880 நூல்கள் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதுபோன்று 2026 -27 ஆம் நிதியாண்டில் பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 37 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 249 நூல்களும், அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து 46 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 688 நூல்களும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நூல்கள் மாவட்ட மைய நூலகத்திலேயே உள்ளன. எந்த நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை. மொத்தமாக 1,797 நூல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட நூலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.