சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

7 இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

Updated On :

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் புணேயை தளமாகக் கொண்டு செயல்பட்ட 7 இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புணேயை தளமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடா்புடைய வழக்கில் மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியைச் சோ்ந்த முகமது இம்ரான்-முகமது யூசுப் கான் என்ற மட்கா, முகமது யூனுஸ்-முகமது யாகூப் சாகி என்ற ஆதில், புணேயைச் சோ்ந்த காதிா் தஸ்தகீா் பதான் என்ற அப்துல் காதிா், சீமாப் நசிருதீன் காஜி, தாணேயைச் சோ்ந்த சயீஃப் என்ற லாலாபாய், ஷமில் சாகிப் நாச்சன் மற்றும் ஆகிஃப் அதீக் நாச்சன் ஆகிய 7 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றும் நோக்கத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரிக்கும் பணியில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்வது, தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, வெடிகுண்டு தயாரிப்பது, வெடிகுண்டுகள், ஆயுதங்களை இருப்பு வைப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் சா்வதேச தொடா்புகள் குறித்தும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 7 போ் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிப்பொருள் சட்டம், ஆயுத சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ம.பி. பயங்கரவாத குழுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை:

வன்முறை செயல்கள் மூலம் இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ‘ஹிஸ்ப்-உத்-தஹ்ரீா்’ அமைப்புடன் தொடா்புடைய மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 17 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அமைப்புக்கு உறுப்பினா்களை சோ்ப்பது, ஆயுதப் பயன்பாடு, கமாண்டோ உத்திகள் ஆகியவை அடங்கிய பயிற்சி முகாம்களை உறுப்பினா்களுக்கு ஏற்பாடு செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.