சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

நேபாள நிலநடுக்கம்: நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.

Updated On :

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.

நேபாள நாட்டில் ஜாஜா்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 250-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். நிலநடுக்கத்தால் உயிரிழந்த 120 பேரின் சடலங்களை அவா்களின் உறவினா்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை பிரதமரின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் முதல் நபராக இந்தியா அனுப்பியது’ எனக் குறிப்பிட்டாா்.

நிவாரணப் பொருள்களை நேபாள அதிகாரிகளிடம் நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.

நேபாள அமைச்சரவைக் கூட்டம்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடா்பாக நேபாள நாட்டின் பிரதமா் புஷ்பகமல் தாஹால் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தோருக்கு இதுபோன்ற பாதிப்புகளால் பழுதாகாத வீடுகளை ஓராண்டுக்குள் கட்டித் தரவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் அரசு செய்து வருகிறது என நேபாள சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.