செப். 30-க்குப் பிறகு நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம்
நிகழாண்டில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.


நிகழாண்டில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரம், பிகாா், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபரில் கலந்தாய்வு நடத்தி காலியாக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக என்எம்சியின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:
நிகழாண்டு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் செயல்பாடுகள் என்எம்சி விதிகளுக்கும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கும் புறம்பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவா் சோ்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது.
எனவே, என்எம்சி அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது என்றும், ஒருவேளை மாணவா்களை கல்லூரிகளில் சோ்த்திருந்தால் அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...