
சொந்த மாநிலமான குஜராத்தில் செப்.26,27 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி அங்கு கல்வித் திட்டங்கள் சிலவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
மேலும், சோட்டா, உதேபூரில் உள்ள பழங்குடியினர் நகரமான பொடேலியில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
குஜராத்தில் சுவாமி விவேகானந்த ஞான சக்தி உறைவிடப் பள்ளிகள், ரக்ஷா சக்தி பள்ளிகள், ஞான சேது மெட்ரிக் உதவித்தொகை போன்ற கல்வி சார்ந்த திட்டங்களையும் அவர் தொடக்கிவைக்கிறார்.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்!
பொடேலியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டுவார் எனத் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறைச் செயலர் வினோத் ராவ் தெரிவித்தார். இந்த திட்டங்கள் மாநிலம் முழுவதும் புதிய வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 35,133 அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...