ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

ஆந்திர வனப் பகுதியில் தண்ணீரை தனக்குள் சேமித்து வைக்கும் அதிசய மரம்: விடியோ வைரல்

Updated On :

ஆந்திர மாநில வனப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் வரும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், கிந்துகுரு வனப் பகுதியில் பாபிகொண்டலு தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு் லாரல் என அழைக்கப்படும் மரத்தின் மரப் பட்டையை வன அதிகாரி ஒருவர் அரிவாளால் வெட்டினார். அப்போது மரத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தது.

மரத்தில் இருந்து சுமார் 20 லிட்டர் தண்ணீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீரை தனக்குள் சேமித்து வைக்கும் அமைப்பு இருப்பதைக் கண்டு வன அதிகாரிகள் ஆச்சர்மடைந்தனர்.

இருப்பினும் இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த மரம் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.