ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியா?

நிரந்தர உறுப்பினர் பதவி: இந்தியாவின் முயற்சிகளும் உலகளாவிய ஆதரவும்
எஸ். ஜெய்சங்கர்
எஸ். ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பினராக இடம்பெறும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இந்தியாவுக்கு ஆதரவான உணர்வு மேலோங்கி வருவதாகவும் அதே நேரத்தில் இலக்கை அடைய கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஐக்கிய நாடுகள் அவை 80 ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது சீனா, பிரான்ஸ், ரஷியா பேரமைப்பு, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா தங்களை நிரந்தர உறுப்பினராக நிலைநிறுத்திக் கொண்டன. அப்போது 50 சுதந்திர நாடுகள் மட்டுமே இருந்தன, தற்போது உலகின் புவிசார் அரசியல் குறிப்பிடத்தகுந்த அளவில் பரிணமித்துள்ளது. தற்போது 193 நாடுகள் உள்ளன. ஆனால் 5 நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளன, மாற்றத்திற்காக அவர்களின் கருத்தைக் கேட்பது விசித்திரமானது. சிலர் ஒத்துக்கொள்வார்கள், சிலர் நேர்மையோடு முன்நகர்வார்கள், சிலர் பின்னணியில் வேலை செய்வார்கள்.

நாம் மிக நிச்சயமாக (நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து) பெறுவோம். ஆனால் எந்த பெரிய விஷயமும் கடின உழைப்பின்றி சாத்தியமாகாது. கடினமாக உழைக்க வேண்டும், இன்னும் அதிகமாக.

நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் அதிகரிக்கும்போது உலகம் முழுவதும் உருவாகும் உணர்வு ஐநாவை பலவீனமாக்கும். உக்ரைன் போரிலும் காஸாவிலும் ஐநாவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இந்த உணர்வு அதிகரித்தால் நாம் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com