மிகப் பெரிய தலைவராகிவிட்டார் கேஜரிவால்: ஃபரூக் அப்துல்லா

கேஜரிவால் சிறைக்கு சென்றதால் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)ANI

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

“சிறைக்கு சென்ற பிறகு அவரது அந்தஸ்து மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். இது ஆம் ஆத்மிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பஞ்சாபில் 13 மக்களவை தொகுதிகளையும், தில்லியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஆம் ஆத்மி கைப்பற்றும். அதுமட்டுமின்றி, ஹரியாணா மற்றும் ஹிமாசலிலும் அவரின் கைது பிரதிபலிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவு பிரச்னை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “வங்கதேசத்துக்கு நமது நிலத்தை பிரதமர் அளித்துள்ளார். லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. அருணாசல் மாநில பகுதிகளுக்கு நேற்று சீனா பெயர் வைத்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பாஜக எதுவும் பதிலளிக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருவரை பார்த்து ஒரு விரலை நீட்டினால், 3 விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com