ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பகவந்த் மான் உள்ளிட்டோரின் பெயர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளது.
ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கேஜரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அரவிந்த் கேஜரிவாலின் கடிதத்தை படித்து சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிட்டு வரும் அவரது மனைவி சுனிதா நேரடி அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!
களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

இந்த நிலையில், குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சுனிதாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும், சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜரிவால், மனீஷ் சிசோடியா பெயரும், ஜாமீனில் வெளிவந்துள்ள சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்பட 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com