எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சஞ்சய் சிங்கும், சுனிதா கேஜரிவாலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

News image
- ANI
Updated On :16 ஏப்ரல் 2024, 9:27 am

DIN

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அரவிந்த் கேஜரிவால். கேஜரிவாலுக்கு அடுத்த மூத்த தலைவரான மனீஷ் சிசோடியாவும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பிரசாரத்தை வேகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆம் ஆத்மி உள்ளது.

சிறையில் உள்ள கேஜரிவாலின் கடிதத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் அடிக்கடி சமூக வலைதளத்தில் படித்து விடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து சுனிதா கேஜரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் ஆத் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், சுனிதா கேஜரிவாலின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள சஞ்சய் சிங், தில்லியில் பொறுப்பேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.