பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

பாஜகவின் மதப்பிரிவினை குறித்து சர்மிளா குற்றச்சாட்டு
ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி
ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி

ஆந்திர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி, மதத்தின் பேரால் பாஜக, மக்களைப் பிளவுபடுத்துவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக என தெரிவித்த அவர் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜகவுக்கு இவர்கள் தலையசைப்பதாக விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலிக்கு உத்தரவாதமில்லை என மோடி பேசியதைக் குறிப்பிட்ட சர்மிளா, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர் என குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி அன்பு பரப்புவதைக் குறித்து பேசும்போது பிரதமர் மோடி பிரிவினையைக் குறித்து பேசுவதாகவும் அவர் செய்த முன்னேற்ற பணிகள் குறித்து பேசுமாறும் சர்மிளா தெரிவித்தார்.

அவரது சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நிறைந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் மற்றும் தெலுங்கு தேசம் இரு கட்சிகளும் மாநிலத்துக்கு முறையாக கிடைக்க வேண்டிய சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுத்தர தவறிவிட்டன எனவும் அது கிடைத்திருந்தால் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் போலி மதுபானங்களை விற்று மக்களின் வாழ்வில் விளையாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com