வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மருத்துவரின் தலைமுடியைப் பிடித்து கம்பியில் இடித்த நோயாளி.. என்ன நடக்கிறது?

மருத்துவரின் தலைமுடியைப் பிடித்து நோயாளி ஒருவர் கட்டில் கம்பியில் இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
மருத்துவமனை - கோப்புப்படம்- Center-Center-Vijayawada
Updated On :27 ஆகஸ்ட் 2024, 7:18 am

DIN

நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், திருப்பதியில் நோயாளி ஒருவர் பெண் மருத்துவரின் தலை முடியைப் பிடித்து, கட்டில் கம்பியில் இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதியில் உள்ள எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

இந்த சிசிடிவி காட்சியில், மருத்துவரைத் தாக்கிய நோயாளி, சிகிச்சை செய்துகொண்டிருந்த மருத்துவரை நேருங்கி, அவரது தலை முடியை கையில் பிடித்து, அங்கிருந்த இரும்புக் கட்டிலின் கம்பியில் மருத்துவரின் தலையை இடிக்கிறார். அங்கு இருந்த மற்ற மருத்துவர்கள் விரைந்து சென்று மருத்துவரைக் காப்பாற்றுகிறார்கள்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையின் இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், எதிர்பாராதவகையில், பங்காரு ராஜு என்ற நோயாளி தன்னை தாக்கியிதாகவும், அவரிடம் கூர்மையான ஆயுதங்கள் ஏதேனும் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என்றும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை மருத்துவர்கள், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மருத்துவமனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கு நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், திருப்பதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.