பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சம்பல் வன்முறை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தார்.

News image

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

Updated On :3 டிசம்பர் 2024, 12:41 pm IST

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று அவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியதும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ் கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்னையை தனது இருக்கையிலிருந்து எழுந்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்துப் பேச அவை தலைவரிடம் அனுமதி கோரினார்.

பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பலாம் என அவைத்தலைவர் கூறியதால், யாதவ் மற்றும் அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில், சமாஜ்வாதி உறுப்பினர்கள், கோஷங்களை எழுப்பினர்.

சமாஜ்வாதி உறுப்பினர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, ​​திமுக உறுப்பினர் ஏ. ராஜா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கையிலிருந்து எழுந்து சமாஜ்வாதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

சமாஜ்வாதி கட்சி எம்பிக்களுக்கு ஆதரவாக என்சிபி மற்றும் சிவசேனா உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் அதானி குற்றப்பத்திரிகை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.