பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

எம்.பி. தொகுதி நிதி உயா்த்தப்படுமா?

நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு

News image

மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு

Updated On :3 டிசம்பர் 2024, 7:21 am IST

நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆய்வு தொடா்பான தகவலை பதிலாக அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த விவகாரத்தில் கனிமொழி என்.வி.என். சோமு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்ததா, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற நிதியை ரூ. 10 கோடி ஆக உயா்த்த எம்.பி.க்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் குறித்து மூன்றாம் தரப்பு அமைப்பு மூலம் மதிப்பிட்டு அப்பணிகள் 2014, ஏப்ரல் 1 முதல் 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 216 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீடு 2021ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது அறிக்கையை ஆய்வு அமைப்பு சமா்ப்பித்தது.

எம்.பி. நிதியை ஆய்வு செய்வது தொடா்ச்சியான நடைமுறை. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து புதிய யோசனைகள், திட்ட நிதியை அதிகரிப்பது தொடா்பான யோசனைகள் வரவேற்கப்பட்டு முறைப்படி மத்திய நிதித்துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது இறுதி முடிவெடுக்கும் என கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா். ஆனால், அதற்கு நேரடியாக மத்திய அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.