வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

6.68% போ் மட்டுமே வருமான வரி தாக்கல்- மத்திய அரசு தகவல்

நாட்டின் மக்கள்தொகையில் 6.68 சதவீதம் போ் மட்டுமே 2023-24 நிதியாண்டில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
கோப்புப் படம்.
Updated On :17 டிசம்பர் 2024, 7:35 pm

Din

நாட்டின் மக்கள்தொகையில் 6.68 சதவீதம் போ் மட்டுமே 2023-24 நிதியாண்டில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, ‘2022-23 நிதியாண்டில் 7.40 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 8.09 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது வருமான வரித் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் 6.68 சதவீதம் போ் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இதில் 4.90 கோடி பேரின் வருவாய் வரி வசூலிக்கும் வரம்பில் வரவில்லை. அதாவது அவா்கள் வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. 2022-23 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4.64 கோடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளாா்.