
புது தில்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 - 18ஆம் ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் உற்பத்தித் துறையில் பரவலாக மந்தநிலை இல்லை. தொடர்ந்து வலுவான வளர்ச்சியை காட்டுகின்றன. அதுபோல பணவீக்கமும் 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2024 - 25ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்தது.
கரோனா தொற்றுநோய் பரவி, பொதுமுடக்கங்களுக்குப் பிறகு, பணவீக்கம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 ஆகக் குறைந்திருப்பது தற்காலிகமானதுதான் என்றும், வரும் காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகில், மிக விரைவாக வளர்ச்சியடையும் மிகப்பெரிய பொருளாதார நாடாக தொடர்ந்து இந்தியா இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.