அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில் அவரது 9 வயது மகன் ஸ்ரீ தேஜ், மூளைச் சேதமடைந்து சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ தேஜ் மிக மோசமான நிலையில் மூளை சேதமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குணமடைய மிக நீண்ட காலம் ஆகலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவனின் மருத்துவத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கும் நிலையில், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிச. 4-ஆம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக பலியானார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிச.5ஆம் தேதி காலை வெளியானது. படம் வெளியாவதற்கு முன் சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் முதல் நாள் வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க.. சென்னைக்கு இதுதான் கடைசி மழையா?
இதையும் படிக்க: ஒரு ஸ்ரீவள்ளியின் மரணமும் குற்றவாளி புஷ்பாவும்!
அதுபோல, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற போது தில்சுக்நகரைச் சேர்ந்த 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
திரையரங்குக்கு திடீரென நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததே, கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் வருவதை தியேட்டர் நிர்வாகம் அறிந்திருந்தும், அவர்களுக்கென்று தனி வழியோ, வெளியேற வழியோ இல்லை என்று குற்றம்சாட்டி திரையரங்கு மீதும் வழக்குப் பதிவ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

கண்ணீர் சிந்தியபடி பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது: பெ.சண்முகம் வலியுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



