பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்புவதிலும் இந்தியா முதலிடம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் மக்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2024, 12:45 pm

DIN

வெளிநாடுகளில் பணிபுரியும் மக்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தங்கள் செலவுபோக மீத சம்பளத் தொகையை இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புகின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 10,70,700 கோடி இந்தியர்களால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைவிட இந்தியா அதிகளவிலான தொகையை மாற்றுவதில், இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதன் மூலம், அந்த நாட்டுக்கும் வருவாய் கிடைக்கிறது. இதன்மூலமாக, இந்த ஆண்டில் இந்தியா 129 பில்லியன் டாலர் வரவழைப்புடன் பணம் அனுப்புவதில் முதலிடத்திலும், தொடர்ந்து மெக்ஸிகோ (68 பில்லியன்), சீனா (48 பில்லியன்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன்), பாகிஸ்தான் (33 பில்லியன்) ஆகியவை உள்ளன. உலக வங்கி தரவுகளின்படி, 2023-ல் பதிவுசெய்யப்பட்ட 1.2 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு பணம் அனுப்பும் வளர்ச்சி விகிதம் 5.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.