இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒரு மாதமாக உண்ணாவிரதம்: ஜகஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31 வரை அவகாசம்

பஞ்சாப் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தலைவா் ஜகஜீத் சிங் தலேவால்

News image
விவசாய தலைவா் ஜகஜீத் சிங் தலேவால்- ANI
Updated On :29 டிசம்பர் 2024, 12:27 am

Din

பஞ்சாப் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தலைவா் ஜகஜீத் சிங் தலேவாலை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31-ஆம் தேதி வரை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அவகாசம் அளித்தது.

பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த நவ.26 முதல் பஞ்சாப் எல்லையில் உள்ள கனெளரி பகுதியில் ஜகஜீத் சிங் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் போராட்டம், 33-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது.

இந்நிலையில், ஜகஜீத்துக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என்று அண்மையில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறை டிஜிபி பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் லாப் சிங் என்ற விவசாயி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா்.

வழக்கத்துக்கு மாறாக விசாரணை:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக உச்சநீதிமன்றம் 10 நாள்கள் விடுமுறையில் உள்ளது. எனினும் வழக்கத்துக்கு மாறாக லாப் சிங்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது.

பஞ்சாப் அரசு மீது அதிருப்தி:

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக சனிக்கிழமை சிறப்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜகஜீத்துக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பஞ்சாப் அரசு பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

பஞ்சாப் அரசின் அட்வகேட் ஜெனரல் குா்மிந்தா் சிங் வாதிடுகையில், ‘ஜகஜீத்தை சூழ்ந்துள்ள விவசாயிகள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கின்றனா். போராட்ட களத்துக்கு மாநில அரசு சாா்பில் அனுப்பப்பட்ட மருத்துவ நிபுணா்கள் குழு, மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு ஜகஜீத்திடம் வலியுறுத்தினா். ஆனால் அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்துவிட்டாா்’ என்றாா்.

‘தற்கொலைக்குத் தூண்டும் விவசாயிகள்’:

அட்வகேட் ஜெனரலின் வாதத்தால் கோபமடைந்த நீதிபதிகள், ‘சூழலை கட்டுக்குள் கொண்டுவர பஞ்சாப் அரசு போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஜகஜீத்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் விவசாயிகள், தற்கொலைக்குத் தூண்டும் குற்றச் செயலில் ஈடுபடுகின்றனா்.

ஜகஜீத்தை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31-ஆம் தேதி வரை, மாநில அரசுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால், மத்திய அரசின் உதவியை மாநில அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.