
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (வி.ஆர்.எஸ்.) திட்டத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கவுள்ளது. இது ஒட்டுமொத்த பி.எஸ்.என்.எல். ஊழியர்களில் 35 சதவீதமாகும்.
ஊழியர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கும் முன்மொழிவுக்கு தகவல் தொலைத் தொடர்புத் துறை நிதித் துறையின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ. 7,500 கோடியை ஊழியர்களின் ஊதியத்துக்காக செலவிட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 38% ஆகும்.
இந்த செலவினத்தைக் குறைத்து ஆண்டுக்கு ரூ. 5000 கோடியாகக் குறைக்கும் நோக்கத்தில் 2வது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த பிஎஸ்என்எல் ரூ. 1500 கோடியை மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் விருப்ப ஓய்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.