இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ம.பி. பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். 

News image
ம.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி
Updated On :6 பிப்ரவரி 2024, 10:44 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். 

ம.பி.யின் ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளது. விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தீ விபத்துக்கு அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் உதய் பிரதாப் சிங், டிஜிபி, ஊர்க்காவல்படை அரவிந்த் குமார் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தீ விபத்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவத் தொடங்கியதால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.