பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி, 30 பேர் காயம்!

பாகிஸ்தானின், பலுசிஸ்தானின் பிஷினில் உள்ள சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானின், பலுசிஸ்தானின் பிஷினில் உள்ள சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 

பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை வேட்பாளர் அஸ்பான்ட் யார்கான் கக்கர். இவர் பிப்.8ல் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரது அலுவலகம் அருகே இன்று காலை குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் தெஹ்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

குண்டுவெடிப்புக்குப் பிறகு, குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் அவசரநிலை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கூடுதல் ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார செயலாளர் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com