நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் அரசு வெற்றி!

பிகார் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் குமாரின் அரசு வெற்றி பெற்றது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்-

பிகார் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் குமாரின் அரசு வெற்றி பெற்றது.

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், கடந்த மாதம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், நிதீஷ் குமாருக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் இன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில், நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 129 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
பிகார் சட்டப் பேரவை: அவைத் தலைவர் நீக்கப்பட்டார்

முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த பேரவைத் தலைவர் அவாத் பிஹாரி செளத்ரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com