பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: காங்கிரஸ் வாக்குறுதி!

காங். நடவடிக்கை 15 கோடி விவசாய குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: காங்கிரஸ் வாக்குறுதி!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸின் நடவடிக்கை 15 கோடி விவசாய குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளைச் சேர்ந்த பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com