இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போராட்டம்: ஷம்பு எல்லையில் தடைகளை உடைக்கும் விவசாயிகள்

தில்லியை நோக்கி வரும் விவசாயிகள் பேரணியில் ஷம்பு எல்லையில் தடைகளை உடைக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

News image
Updated On :21 பிப்ரவரி 2024, 1:02 pm

DIN

பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதியான ஷம்பு எல்லையில், தில்லியை நோக்கிச் செல்ல முடியாதபடி பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்திய தடைகளை விவசாயிகள் உடைத்தெறியப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இதனால், அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. தடைகளை உடைத்தெறிய முனையும் விவசாயிகளை நோக்கி ஹரியானா காவல்தறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பாய்ச்சி அடித்தும் தடுத்து வருகிறார்கள்.

இதனால், ஷம்பு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. ஏராளமான விவசாயிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கனௌரி எல்லையில் ஒருவர் பலியானதாகவும் 12 விவசாயிகள் காயமடைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா். பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் தில்லி நோக்கிச் சென்றனர்.

முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையொட்டி அறிவித்தபடி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள் தில்லியை நோக்கி இன்று காலை மீண்டும் பேரணியைத் தொடங்கினர். இன்று மாலை ஷம்பு மற்றும் கனௌரி எல்லையை விவசாயிகள் அடைந்த போது, அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் ஏராளமான விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.