அஸ்ஸாம்: லாரி-பேருந்து மோதலில் 12 போ் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் பலிஜன் அருகே புதன்கிழமை (ஜன.3) அதிகாலை சுற்றுலாப் பேருந்தும்,  லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியாகினர்.
பேருந்தும் லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியாகினர்.
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியாகினர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகத் மாவட்டத்தில் புதன்கிழமை லாரியும் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 38 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக கோலாகத் மாவட்ட காவல் ஆணையா் ராஜன் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பலிஜானுக்கு அருகேயுள்ள தொ்கான் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திலிங்கா மந்திருக்கு 49 பேருடன் பயணித்த சுற்றுலாப் பேருந்து மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு லாரி நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 38 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நான்குவழிச் சாலையில் சேதம் ஏற்பட்டிருந்ததால் ஜோா்ஹாட்டிலிருந்து வந்த சரக்கு லாரி தவறான சாலையில் சென்றபோது அவ்வழியே வந்த சுற்றுலாப் பேருந்து மீது மோதியுள்ளது.

விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநா்களும் உயிரிழந்தனா். அதனால் உரிய விசாரணைக்குப் பிறகே மற்ற தகவல்கள் தெரிய வரும். விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே உள்ள கிராம மக்கள் உடனடியாக அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா் என்றாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் தெரிவித்துள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com