லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை!

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை கொண்டுவரப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2024, 3:11 am

DIN

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை கொண்டுவரப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் வரும் 22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 121 ஆச்சாா்யாா்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனா்.

வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.  கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.