பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பிகாா் மாநில முன்னாள் முதல்வர் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி வெளியிட்ட இரு மொழிப்பட போஸ்டர்!
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் கர்பூரி தாக்குரின் 100வது பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்.
அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் தாமதமான முடிவினை வரவேற்கிறேன்.
இதேபோல தலித் மக்களின் சுயமரியாதைக்காக போராடிய கன்ஷிராமின் பங்களிப்பும் மறக்க முடியாதது. அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



