மும்பை தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
தெற்கு மும்பையில் உள்ள மரச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மும்பை: தெற்கு மும்பையில் உள்ள மரச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிராண்ட் சாலை பகுதியின் சோர் பஜார் பகுதியில் அமைந்துள்ள லக்டா பஜாரில் அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய தீ கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.
மீட்புப் பணியின் போது சடலமாக மீட்கப்பட்டவர் தன்ஷியாம் பிரஜாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தையின் தரை மற்றும் முதல் தளங்களில் உள்ள மர இருப்பு, ரசாயனங்கள் மற்றும் மின்சார வயரிங் ஆகியவற்றுக்கு தீ பரவியதால் அருகிலுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களையும் சேதப்படுத்தியது. தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...