அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மத்திய நிதியமைச்சகம்

அடுத்த மூன்றாண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த மூன்றாண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் 'இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு' எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “நிதித்துறையில் தற்போது செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 7 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும். 

தற்போதைய சீர்திருத்தங்கள் தடைபடாமல் தொடர்ந்தால், 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ந்த நாடு' எனும் அந்தஸ்தை நாம் அடைய முடியும். இந்தியப் பொருளாதாரம் 2024 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி நிகழ்ந்தால், கரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய நான்காவது ஆண்டாக பொருளாதாரம் 7% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியடைந்திருக்கும். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, மத்திய - மாநில அரசுகளின் முழுமையான பங்கேற்பும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com