ம.பி.: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டுத் தற்கொலை!
தற்கொலைக்கான சரியான காரணத்தை போலீஸார் குழு அமைத்து விசாரித்து வருகின்றது....


மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்து ஐந்து பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோண்ட்வா தாலுகாவில் உள்ள ரவ்டி கிராமத்தில் 5 பேர் இறந்து பற்றிய தகவல் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் ராகேஷ் டோட்வா (27), அவரது மனைவி லலிதா டோட்வா (25) மற்றும் அவர்களின் குழந்தைகளான லக்ஷ்மி (9), பிரகாஷ் (7), அக்ஷய் (5) என அடையாளம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் ஐந்து பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். தற்கொலைக்கான எந்த குறிப்பும் இறந்த இடத்தில் கைப்பற்றவில்லை.
தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த அலிராஜ்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...