இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கிக் கொண்டு படைகளைப் பலப்படுத்துகிறோம்: மோடி

எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கிக் கொண்டு படைகளைப் பலப்படுத்தி வருகிறோம் என்றார் மோடி

News image
பிரதமர் மோடி- -
Updated On :2 ஜூலை 2024, 12:50 pm

DIN

புது தில்லி: எதிர்க்கட்சிகள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கிக் கொண்டு படைகளைப் பலப்படுத்தி வருகிறோம் என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் கடும் அமளிக்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி 2 மணி நேரமாக உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி, நேற்று நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். ரஃபேல் குறித்தும், ஹெச்ஏஎல் குறித்தும் ராகுல் காந்தி பொய் பேசியுள்ளார். பொய்மையின் பாதையில் மக்களை அழைத்துச் சென்று நாடாளுமன்றத்தை ஏமாற்ற ராகுல் முயல்கிறார்.

நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். போர்ச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறோம். போர் விமானங்களை வாங்கிய போது அதை அலட்சியம் செய்தது காங்கிரஸ். நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். ஒரே நாடு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

நாட்டின் படைகள் பலவீனமடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டு மணி நேரம் நீடித்த பிரதமர் மோடியின் உரைக்கு இடையே, எதிர்க்கட்சியினர் கடும் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். நீட், மணிப்பூர் என எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையேதான் பிரதமர் மோடி தனது உரையைத் தொடர்ந்தார்.

முன்னதாக, நாட்டை 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாள்களும் உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் மக்கள் நினைத்திருந்தார்கள். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் எங்களை மக்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத்தயார், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.