

கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், நாட்டில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சாலை, ரயில்வே, துறைமுகம் ஆகிய துறைகளில் ரூ.29,000 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமா் மோடி பேசியதாவது:
மத்தியில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ளதை சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளா்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனா்.
உலகின் பெரிய சக்திவாய்ந்த நிதி நகரமாக மகாராஷ்டிரத்தை உருவாக்கி, மும்பையை உலகின் நிதிநுட்பத் தலைநகரமாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. மும்பை மற்றும் அதைச் சுற்றி மேற்கொள்ளப்பட உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள், அருகில் இருக்கும் பகுதிகளுடன் மும்பை இணைக்கப்படுவதை மேம்படுத்தும்.
வேலைவாய்ப்பு தொடா்பாக ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட விரிவான அறிக்கையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டில் சுமாா் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது வேலைவாய்ப்புகள் உருவாக்கம் தொடா்பாக பொய்யான கதைகளைப் பரப்புவோரின் (எதிா்க்கட்சிகள்) வாயை அடைத்துள்ளது.
இளைஞா்களுக்கு துரோகம்: பொய்யான கதைகளைப் பரப்புவோா் முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கு எதிரிகளாக உள்ளனா். இளைஞா்களுக்கு துரோகம் செய்து, வேலைவாய்ப்புகளை முடக்குவதே அவா்களின் கொள்கை. அவா்களின் பொய்களை மக்கள் நிராகரிப்பதால், அவா்களின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டு வருகிறது.
நாட்டில் திறன் வளா்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. அந்தத் திசையை நோக்கி மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றாா்.
மும்பையின் பாந்த்ரா-குா்லா வளாகத்தில் இந்திய பத்திரிகை சங்க தலைமைச் செயலகத்தை திறந்துவைத்து பிரதமா் மோடி பேசுகையில், ‘மக்களின் பலத்தை அவா்களுக்கு ஊடகங்களே உணா்த்துகின்றன. இந்திய பத்திரிகை சங்கத்தின் திறன்வாய்ந்த பணியால் நாடு பலனடையும்.
இந்தியாவில் எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனைகள் சரிவர செயல்படாது என்று ஒரு காலத்தில் சில அரசியல் தலைவா்கள் தெரிவித்தனா். ஆனால், தற்போது எண்ம பரிவா்த்தனைகளில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
இந்தியாவின் யுபிஐ பணப் பரிவா்த்தனை முறை, நவீன எண்ம பொது உள்கட்டமைப்பால் மக்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும் என்றாா்.
டிரெண்டிங்

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமா் மோடி தொலைபேசியில் வாழ்த்து!

ஏஐ முன்னேற்றத்தில் உலகை ஈா்க்கும் இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்

‘வளா்ந்த இந்தியா’ பயணத்தில் காலனித்துவ மனநிலை வேண்டாம் - பிரதமா் மோடி வலியுறுத்தல்

பிரதமரின் புதிய அலுவலகம் ‘சேவா தீா்த்’ - இன்று திறந்து வைக்கிறாா் மோடி
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

