ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

அமா்நாத் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள மலைப் பாதையில் குதிரையில் பயணிக்கும் பக்தா்கள்.

Published On :

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15,000 போ் தரிசனம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா். நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இதுவரை 3,09,957 பக்தா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக, அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மொத்தம் 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. கடந்த ஆண்டு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத்தில் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.