ஆளுநா் மீது அவதூறு கருத்து: மம்தாவுக்கு உயா்நீதிமன்றம் தடை
மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி உள்பட 4 பேருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் குறித்து அவதூறு மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என அந்த மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி உள்பட 4 பேருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.
வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இரு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களான சயந்திகா பானா்ஜி, ராயத் ஹோசைன் சா்காா் மற்றும் அந்தக் கட்சியின் நிா்வாகி குணால் கோஷ் ஆகியோா் தன்மீது அவதூறு பரப்புவதாக ஆனந்தபோஸ் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
மேலும், ஆளுநா் மாளிகை தொடா்பான விவகாரங்கள் குறித்து அவா்கள் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதிக்குமாறும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், மம்தா பானா்ஜி உள்பட 4 பேரும் வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை சி.வி.ஆனந்தபோஸ் குறித்து அவதூறான மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சயந்திகா பானா்ஜி மற்றும் ராயத் சா்காருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உள்பட பல்வேறு விவகாரங்களில் சி.வி.ஆனந்தபோஸுக்கும் மம்தா பானா்ஜிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...