திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீதி ஆயோக் மாற்றியமைப்பு: 15 மத்திய அமைச்சா்கள் இடம்பெற்றனா்

நீதி ஆயோக் அமைப்பின் அதிகாரபூா்வ உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் குழுவில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் (என்டிஏ) சோ்ந்த 15 அமைச்சா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:55 pm

Din

புது தில்லி: நீதி ஆயோக் அமைப்பின் அதிகாரபூா்வ உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் குழுவில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் (என்டிஏ) சோ்ந்த 15 அமைச்சா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.

திட்டக் குழுவுக்குப் பதிலாக கடந்த 2015, ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். துணைத் தலைவராக அவரால் நியமிக்கப்பட்ட சுமன் கே.பெரி உள்ளாா். மேலும், 4 நிரந்தர உறுப்பினா்கள் உள்ளனா்.

அதேபோல் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நிா்வாகக் குழுவில் இடம்பெறுவா்.

தற்போது மாற்றியமைக்கப்பட்ட நீதி ஆயோக்கின் உறுப்பினா்களாக மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிா்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான் ஆகிய 4 போ் இடம்பெற்றுள்ளனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா மற்றும் ஹெச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான் என என்டிஏ கூட்டணியைச் சோ்ந்த 11 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் நீதி ஆயோக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.